
சென்னை : எழும்பூரைச் சேர்ந்த ஏ.கே.ரபி பெய்க், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: தமிழ்நாடு வக்பு வாரியம், 2014 டிசம்பரில் இளநிலை உதவியாளர்கள் 32 பேர், டைப்பிஸ்ட் 5 பேர், 7 அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஒரு டிரைவர் என 47 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஓராண்டாக பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், ஆட்சி முடியும் நேரத்தில் வாரியத்தின் தலைவர் தமிழ்மகன் உசேன் அவசர அவசரமாக அவற்றை பரிசீலனை செய்து கடந்த மாதம் 20ம் தேதி தேர்வையும் நடத்தியுள்ளார். வாரியத்தின் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்கவும், ...