
சென்னை: லஸ் சர்ச் சாலையின் இடையே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணிக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாநகராட்சியால் அத் திட்டம் கைவிடப்பட்டது. மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தாமல் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து தமிழக அரசு, போக்குவரத்து போலீஸ், காவல் துறை அதிகாரிகள் என பலருக்கு ...