
சென்னை: சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக 16 சிறப்பு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது. இந்த சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியிலும் செங்கல்பட்டு தொகுதியிலும் அமைகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16ம்தேதி நடைபெற உள்ளதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ...