
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், இன்று வட்டார அளவில் மறியல் மேற்கொள்ள உள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் கடந்த 10ம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை அரசு ஏற்காததால் கடந்த 12ம் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இல்லாததால் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ...