
தண்டையார்பேட்டை: தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில், நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது. புதிதாக எந்த அறிவிப்பும் வெளியிட கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் அடங்கும். இந்நிலையில், தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில், நடத்தை விதிமுறைகளை மீறி புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் வினியோகம் செய்வதாக, திமுக சார்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை, அப்பகுதிக்கு சென்று ...