
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபான கடைகளின் ஓரமாக வாகனங்களை நிறுத்தி விட்டு, வாகன ஓட்டிகள் மதுபானங்களை அருந்திய பின், மீண்டும் வாகனங்களை ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக, விபத்து தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபான கடைகளை மூட, வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச ...