
சென்னை: பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து கோவைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் பலமடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருநெல்வேலியில் இருந்து மார்ச் 8ம் தேதி பகல் 2.45 மணிக்கு புறப்படும் பலமடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில் (00651) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூர் வந்துச் சேரும்.இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில்நிலையங்களில் நிற்கும்.சென்ட்ரலில் இருந்து மார்ச் 6ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ...