
சென்னை: தேர்தல் சமையத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வின்சென்பால் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் விரிவாக வெளியிட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், சம்மபந்தபட்டவர்களுக்கு தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ...