
சென்னை: தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நலச்சங்க தலைவர் ஆனந்த் ஆறுமுகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பல ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு குளறுபடிகள், நிர்வாக சீர்கேடுகள், மாணவ, மாணவியர்கள் தற்கொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. ஆண்டுந்தோறும் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய அட்மிஷனை டிசம்பரிலேயே நடத்தி முடிக்கின்றனர். அதிக பணம் வசூலிப்பதற்காகவே இவ்வாறு அவசரமாக அட்மிஷன் போடப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு குளறுபடியில் ஈடுபடும் பள்ளிகள் ...