
சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும், வாழ்க்கை தரத்துக்கு ஏற்ப ஊதியம், பணிசுமைக்கு ஏற்ப சிறப்பு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளான நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மறியலின்போது ...