
சென்னை: செங்கல்பட்டு அடுத்துள்ளது உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கே ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை பறவைகள் அதிக அளவில் வருகை தரும். இந்த சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவிலான பறவைகள் வருகின்றன. குறிப்பாக நத்தைக் கொத்தி நாரை, கூழைக் கடா, கறண்டிவாயன், நாராயண பட்சி, நீர்வாத்து, நீர்காகம், மிளிர்உடல்அரிவாள்மூக்கன், சாம்பல் நாரை, வர்ணநாரை, குருட்டுக் கொக்கு, வெண்கொக்கு, வக்கா உள்ளிட்ட 26 அரிய வகை பறவை இனங்கள் இந்த சரணாலயத்திற்கு ...