தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் (60), முருக்கு வியாபாரி. நேற்று காலை முருக்கு தயாரிக்கும் குடோனில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்தது. தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், குடோன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஜோதிராமலிங்கம் அழுகிய நிலையில், தூக்கிட்டு சடலமாக கிடந்தார். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து ...
↧