
சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் முருகையா பாண்டியன் மீது ஊழல் தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகரைச் சேர்ந்த என்.ஷீலா (55) என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் நீலமேகத்தின் தந்தைக்கு சொந்தமான வீடு அண்ணாநகர் 14வது தெருவில் உள்ளது. இந்த வீட்டில்தான் நான் வசித்து வருகிறேன். கடந்த 1996 மே 7ல் எனது மாமனார் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பு தனது சொத்தின் வாரிசுதாரர்களாக எனது ...