
சென்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: கர்நாடகாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்லாதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காய்கறி சாகுபடி செய்வோருக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதற்கு ஏதுவாக காய்கறிகளை கூட்டுறவு அங்காடிகளின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள்,அரசு நிறுவனங்கள் நடத்தும் 42 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 64 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இதை முன்னிட்டு நேற்று 12 ...