
சென்னை : தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதினெண்கீழ்கணக்கு நூல்களை பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்குப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்புச் செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கையில், ‘பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் ...