
சென்னை: குழந்தையின்மை மருத்துவத்தில் முன்னோடியாகவும், தென்னிந்தியாவில் முதல் சோதனை குழாய் குழந்தையை உருவாக்கியதுமான ஜி.ஜி. மருத்துவமனையின் மற்றொரு உதயமாக ஜி.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நுங்கம்பாக்கம், திருமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்தி நடிகையும், மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் மகளுமான ரேகா கணேசன், திரைப்பட அதிபர் ஏவி.எம்.சரவணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தனர். விழாவில், மருத்துவமனை தலைவரும், மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான டாக்டர் கமலா ...