
துரைப்பாக்கம், : சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 7 ஷேர் ஆட்டோக்களை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த ராஜிவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர் - பெரும்பாக்கம் சாலையில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகர பஸ் மூலம் பயணித்து வருகின்றனர். ஆனால், போதிய அளவு மற்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், மேற்கண்ட தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.ராஜிவ்காந்தி சாலையில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும், நிழற்குடை ...