
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வருகைக்காக 24 மணி நேரத்தில் 8 மாடி கொண்ட சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பொலிவு அடைந்துள்ளது. மேலும், போயஸ் கார்டன் முதல் கமிஷனர் அலுவலகம் வரை சாலையோரங்களில் பேனர்கள் வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வயதை குறிக்கும் வகையில் சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக காமராஜர் சாலையில் உள்ள ...