
துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை அடையார் மத்திய கைலாஷ் முதல் ஆரம்பமாகி சிறுசேரி வரை செல்கிறது. ரூ.300 கோடி செலவில், சுமார் 22 கிமீ தூரத்திற்கு ஆறு வழியாக அமைக்கப்பட்ட இந்த சாலை கடந்த 2010 ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை பராமரிக்கும் பணி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, பெரும்பாக்கம் சாலை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து அவ்வழியாக வரும் ...