
சென்னை: புறநகர் ரயில்பாதைகளில் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. சில நேரங்களில் மின்சார ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுவது வாடிக்கை. பெரும்பாலும் இரவில்தான் பராமரிப்பு நடைபெறுகின்றன. ஆனால், இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே அறிவிப்பதில்லை. இந்நிலையில், சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நேற்று இரவும், இன்றும் பராமரிப்பு பணி செய்ய ரயில்வே முடிவு செய்தது. அதற்காக, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளதாக நேற்று மதியம்தான் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஆவடி செல்லும் 4 ...